http://VisitsToMoney.com/index.php?refId=388566
வேலைக்கு செல்வோர் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், வேலை செய்யும் போது நல்ல மொறுமொறுப்பான சிப்ஸ், பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவது தான். ஆகவே இதனைத் தவிர்த்து, மாறாக பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
சர்க்கரையை குறைக்கவும்:
காபி, டீ போன்றவற்றை குடிக்கும் போது அதில் 2 டீஸ்பூன் சர்க்கரையை போட்டுக் குடித்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். எனவே சர்க்கரைக்கு பதிலாக தேனை உபயோகிப்பது மிகவும் சிறந்தது.
வேலைக்கு செல்வோர், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் எடை குறைவதோடு, கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
உடல் எடையை குறைக்க பயன்படும் பழங்கள் சிட்ரஸ் பழங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் முதன்மையானவையும் கூட. எனவே தினமும் சிட்ரஸ் பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர், பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பார்கள். அதுமட்டுமின்றி, உடல் எடை அதிகமாக உள்ளது என்று சில வேண்டுமென்றே சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் அது தவறான கருத்து. எனவே தினமும் காலையில் ஓட்ஸை சமைத்து, அதில் நட்ஸ், பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.
உடல் ஆரோக்கியமாகவும், எடையை குறைக்கவும் ஆசைப்பட்டால், லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும். இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராகி, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
தண்ணீர் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, வயிற்றை நிறைப்பதோடு, உடலில் வறட்சி ஏற்படாமலும் வைத்துக் கொள்ளும்.
உடல் எடை அதிகமாக இருந்தால், அவற்றை குறைக்க மதிய வேளையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நறுக்கி, அதனை சாலட் போன்று செய்து சாப்பிடலாம். முக்கியமாக இவ்வாறு செய்யும் போது, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
அனைவருக்குமே பிஸ்கட்டை காபி அல்லது டீயின் நனைத்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு க்ரீம் பிஸ்கட் என்றால் பிடிக்கம். ஆனால் அந்த மாதிரியான க்ரீம் பிஸ்கட் உடல் எடையை அதிகரிப்பதோடு, நீரிழிவுக்கு வழிவகுக்கும். எனவே க்ரீம் பிஸ்கட்டை சாப்பிடுவதற்கு பதிலாக, தானியங்களால் ஆன பிஸ்கட்டை சாப்பிடுவது நல்லது.
பெரும்பாலான வேலைக்கு செல்லும் மக்கள், பேக்கரியில் அடிக்கடி பப்ஸ் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அந்த பப்ஸ் சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, உடல் பருமனாகிவிடும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைப்பதில் க்ரீன் டீ மிகவும் பிரபலமானது. இது அனைவருக்குமே தெரிந்த விஷயம். எனவே க்ரீன் டீயை தினமும் 1-2 கப் குடித்து வர வேண்டும்.
வேலைக்கு செல்வோர் உடல் எடையை குறைக்க நினைத்தால், தவறாமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று மதியம் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனால் மதியம் தூக்கம் வருவதோடு, உடலில் கொழுப்புக்களை தங்க வைக்கும். எப்படியென்றால், அதிகமாக உணவு உட்கொண்ட பின், உடலின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால், கொழுப்புக்கள் தங்கி, எடை அதிகரிக்கும்.
அசைவ உணவுகளை சாப்பிட நினைத்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து, க்ரில் செய்த அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் தான் கொழுப்புக்கள் இருக்காது. மேலும் ஆரோக்கியமானதும் கூட.
பெரும்பாலான வேலைக்கு செல்லும் மக்கள், இரவில் தாமதமாக தூங்குவார்கள். இவ்வாறு தாமதமாக தூங்கினால், உடல் மிகவும் மோசமாகிவிடும். மேலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை அதிகரித்துவிடும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க நினைத்தால், சாப்பிட்டதும் தூங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். இதனால் உணவு செரிமானமாகாமல், உணவில் உள்ள கொழுப்புக்கள் உடலில் தங்கி, உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே இரவில் உணவு சாப்பிட்டு 2 மணிநேரத்திற்கு பின், தூங்கச் செல்ல வேண்டும்.
http://VisitsToMoney.com/index.php?refId=388566



